கோலாலம்பூர் – உக்ரைனின் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமான சம்பவத்தின் விசாரணைகளில் ஈடுபட்டிருந்த தலைமை தடவியல் நிபுணர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரை உக்ரைன் நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இண்டீபெண்டண்ட் வெளியிட்டுள்ள தகவலின் படி, உக்ரைனின் மிக மூத்த தடவியல் விஞ்ஞானியான ஓலெக்சன்டர் ருவினின் மீது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் குண்டடிபட்டது.
இந்நிலையில், எம்எச்17 விசாரணைக்கும், ருவின் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிகின்றனர்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக விரைவில் உக்ரைன் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து அறிக்கைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.