மலாக்கா – நேற்றிரவு மலாக்காவிலுள்ள மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் சொற்பொழிவாற்றினார்.
அதில், சுமார் 20,000 பேர் வரை கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
“இந்து சமயம் மற்றும் இஸ்லாம் இடையிலான ஒற்றுமைகள்” என்ற தலைப்பில் பேச அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், ‘இஸ்லாம் – பிரச்சனைகள் மற்றும் மனித நேயத்திற்கான தீர்வுகள்’ என்ற தலைப்பில் நேற்றிரவு 8 மணியளவில் அவர் தனது உரையைத் துவங்கியதாக மலேசியாகினி இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்நிகழ்வில் மலாக்கா மாநில முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன், முன்னாள் முதலமைச்சர் மொகமட் அலி ருஸ்தாம் மற்றும் மலாக்கா செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இட்ரிஸ் தனது துவக்க உரையில், இன்றைய காலத்தில் அனைத்து இன மக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசியுள்ளார்.