Home Featured தமிழ் நாடு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தேர்தல் களத்தில் வைகோ!

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தேர்தல் களத்தில் வைகோ!

531
0
SHARE
Ad

vaiko_1641612fசென்னை – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 20 வருடத்திற்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வைகோ முதல முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது 1996-இல் தான். 1993-ஆம் ஆண்டுதான் அவர் மதிமுகவைத் தொடங்கியிருந்தார். அடுத்த 3 வருடத்தில் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

1996-இல் நடந்த தேர்தலில் அவர் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெறும் 634 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார்.

#TamilSchoolmychoice

1996-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு 3-ஆவது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து 1998 மற்றும் 1999-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வைகோ.

2014-ஆம் ஆண்டு அவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விருதுநகரில் போட்டியிட்டார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. தற்போது, வைகோ 20 வருடத்திற்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.