Home Featured உலகம் ஜப்பானை மீண்டும் தாக்கியது 6.1 புள்ளி நிலநடுக்கம்!

ஜப்பானை மீண்டும் தாக்கியது 6.1 புள்ளி நிலநடுக்கம்!

538
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512தோக்கியோ – இன்று புதன்கிழமை ஜப்பானிய நேரப்படி இரவு 9.13 மணிக்கு 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவுள்ள நிலநடுக்கம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியைத் தாக்கியுள்ளது என ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது..

இதனை அமெரிக்க பூமி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ, மரணமடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

ஜப்பானை கடந்த ஒரு வாரத்தில் தாக்கியுள்ள மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். இதுவரையில் 50 பேர் வரை ஜப்பானிய நிலநடுக்கங்கள் காரணமாக பலியாகியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆயிரக்கணக்கானோர், மின் தடையினாலும், தண்ணீர், உணவு பற்றாக்குறையினாலும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செண்டாய் வட்டாரத்தில் 104 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு உருவாகியது என நிலநடுக்க அளவைகள் தெரிவிக்கின்றன. இதே பகுதிக்கு அருகில்தான்  2011 மார்ச் மாத வாக்கில் மோசமான நிலநடுக்கம் ஒன்று தாக்கி பலத்த சேதங்களை ஏற்படுத்தியது.