நான் கடவுள் ராஜேந்திரன், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், பிரபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
கடந்த 6 நாட்களில் இப்படத்தின் வசூல் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75 கோடி வசூல் செய்த இப்படம், தற்போது உலகம் முழுவதிலும் மொத்தம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ‘தெறி’ படமும் ரூ.100 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது.
ஒருவாரம் கடந்த நிலையிலும் இன்னமும் ‘தெறி’ படம் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இப்படம் இன்னும் பெரிய வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.