Home Featured கலையுலகம் ‘தெறி’ படப் பிரச்சினைக்கு நான் காரணமல்ல – தயாரிப்பாளர் தாணு ஆவேசம்!

‘தெறி’ படப் பிரச்சினைக்கு நான் காரணமல்ல – தயாரிப்பாளர் தாணு ஆவேசம்!

781
0
SHARE
Ad

thanuசென்னை – செங்கல்பட்டில்  தெறி படம் வெளியாகாமல் போனதற்கு நான் காரணமல்ல; செங்கல்பட்டு திரையங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர்செல்வமே முழு காரணம்,” என, தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில், நேற்று தயாரிப்பாளர் தாணு கூறியதாவது: தெறி படம் உலகம் முழுக்க வெளியாகி, பெரும் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில், ஒரே நாளில், 1.06 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

செங்கல்பட்டு திரையங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர்செல்வம், அவரது மகன் திருமணத்திற்கு, நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோரை அழைத்திருந்தார்; இருவரும் வரவில்லை.

#TamilSchoolmychoice

இந்த கோபத்தில் தான், தன்னுடன் சிலரை சேர்த்துக் கொண்டு, தெறி படத்திற்கு வேண்டுமென்றே சிக்கலை உருவாக்கினார். செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும், 10 கோடி ரூபாய் வியாபாரம் முடங்கிவிட்டது.

இதனால், எனக்கு மட்டுமல்ல, பலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு படத்தை வெளியிட, குறைந்தபட்ச தொகையை முன்னரே பெறுவது தற்காப்புக்காகவே; எந்த பணத்தையும் தராமல், படத்தை எப்படி தர முடியும். டிக்கெட் கட்டணத்தில் மட்டும் கணக்கு பார்ப்பவர்கள், திரையரங்கில் விற்கப்படும் உணவுப்பண்டங்களை மட்டும் விலை அதிகரித்து விற்பது ஏன்? எவ்வளவு பேர் சரியாக வரி செலுத்துகின்றனர்?

இதையெல்லாம் கணக்கு கேட்டால் அவ்வளவு தான். இவை அனைத்தையும் அரசும், கடவுளும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். செங்கல்பட்டு ஏரியாவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில், படம் வெளியாகாமல் போனதற்காக, விஜய் ரசிகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

அதற்கு, பன்னீர்செல்வம், தான் பொறுப்பு வகிக்கும் பதவியை, அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் போன்றவரிடம் கொடுத்து விட்டு செல்வது நல்லது என தயாரிப்பாளர் தாணு கூறினார்.