Home Featured நாடு சரவாக்கில் நுழைய அஸ்மின் அலிக்குத் தடை!

சரவாக்கில் நுழைய அஸ்மின் அலிக்குத் தடை!

642
0
SHARE
Ad

கூச்சிங் – இன்று சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கு பெறுவதற்காக விமானம் மூலம் கூச்சிங் வந்தடைந்த சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி, சரவாக் மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதாகக்  கூறி குடிநுழைவுத் துறை அவரை திருப்பி அனுப்பியுள்ளது.

Azmin Ali-sarawak-barred-notice

அஸ்மின் அலிக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுப்பு கடிதம்…

#TamilSchoolmychoice

இன்று காலை 10.30 மணியளவில் கூச்சிங் வந்தடைந்த அஸ்மின் அலியிடம் அவர் சரவாக்கில் நுழையத் தடைவிதிக்கும் கடிதம் வழங்கப்பட்டது.

தனக்குத் தடை விதிக்கப்பட்ட விவரத்தை அஸ்மின் அலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு, குடிநுழைவுத் துறையின் அனுமதி மறுப்பு கடிதத்தையும் வெளியிட்டிருக்கின்றார்.

Azmin Ali-Kuching Airport-barred

கூச்சிங் விமான நிலையத்தில் காத்திருக்கும் அஸ்மின் அலி