சென்னை – இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக, (Travel Agents Federation of India- Tamil Nadu Chapter) சென்னையின் பிரபல பயண முகவர் சிக்கந்தர் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிக்கந்தர் பாட்சா சென்னையில் உள்ள முன்னணி பயண நிறுவனமான ராசி டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.
சென்னையில் இருந்து பல முறை சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பெரிய பயணக் குழுவினரை மலேசியாவுக்கு அழைத்து வந்திருப்பவர் சிக்கந்தர் பாட்சா. மலேசியாவிலும் பல்வேறு அணுக்கமான வணிகத் தொடர்புகளையும், உறவினர்களையும் கொண்டிருப்பவர் சிக்கந்தர் பாட்சா என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிக்கந்தர் பாட்சாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறும் பயண முகவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள்….