Home Featured வணிகம் இந்திய பயண முகவர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிக்கந்தர் பாட்சா தேர்வு!

இந்திய பயண முகவர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிக்கந்தர் பாட்சா தேர்வு!

2094
0
SHARE
Ad

சென்னை – இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக, (Travel Agents Federation of India- Tamil Nadu Chapter) சென்னையின் பிரபல பயண முகவர் சிக்கந்தர் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிக்கந்தர் பாட்சா சென்னையில் உள்ள முன்னணி பயண நிறுவனமான ராசி டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.

Sikkandar Batcha-TAFI Chairmanஇந்திய பயண முகவர்களின் கூட்டமைப்பின் தமிழ் நாடு பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கந்தர் பாட்சாவுக்கு (இடம்-சிவப்பு சட்டையில்) வாழ்த்து….

#TamilSchoolmychoice

சென்னையில் இருந்து பல முறை சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பெரிய பயணக் குழுவினரை மலேசியாவுக்கு அழைத்து வந்திருப்பவர் சிக்கந்தர் பாட்சா. மலேசியாவிலும் பல்வேறு அணுக்கமான வணிகத் தொடர்புகளையும், உறவினர்களையும் கொண்டிருப்பவர் சிக்கந்தர் பாட்சா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sikandar Batcha-TAFI Chairman

சிக்கந்தர் பாட்சாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறும் பயண முகவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள்….