Home Featured கலையுலகம் கேன்சில் ஜகாட் உள்ளிட்ட 10 மலேசியத் திரைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன!

கேன்சில் ஜகாட் உள்ளிட்ட 10 மலேசியத் திரைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன!

748
0
SHARE
Ad

Jagatகோலாலம்பூர் – பிரான்சில் தற்பொழுது 69-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது.

கடந்த மே 11-ம் தேதி தொடங்கிய இவ்விழா, வரும் 22-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கேன்ஸ் திரைப்படச் சந்தையில் (Cannes Film Market), ‘ஜகாட்’ உள்ளிட்ட 10 மலேசியத் திரைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதாக தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FINAS) அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

திரைப்பட விழா (Film Festival), திரைப்படச் சந்தை (Film Market) இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகளாக இருந்தாலும் கூட, இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் தான் நடைபெறுகின்றது.

வரும் மே 17-ம் தேதி, செவ்வாய்கிழமை, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில், பாலாய்ஸ் ஐ (Palais I)-ல் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 10 மலேசியத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்களது திரைப்படங்களைக் காட்சிபடுத்துகின்றனர்.

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தலா 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழ்த் திரைப்படமான ஜகாட்டுடன், மலாய்ப் படங்களான மொகமட் கைருல் அஸ்ரியின் பேகாக் (Pekak), சியாம்சுல் யூசோப்பின் முனாபிக் (Munafik) உள்ளிட்ட மொத்தம் 10 திரைப்படங்கள் இடம்பெறுகின்றன.

இதனிடையே, ஜகாட் இந்த ஆண்டு நியூயார்க் ஆசியான் திரைப்பட விழாவிலும் திரையிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பினாஸ் தலைவர் டத்தோ கமீல் ஓத்மான் தலைமையிலான குழு, மலேசியத் திரைப்படங்களின் அனைத்துலக விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில் இது போன்ற புதிய முயற்சிகளைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.