Home Featured தமிழ் நாடு “யார் வென்றாலும் முதலில் மதுவை ஒழியுங்கள்” – நடிகர் சிவகுமார் வேண்டுகோள்!

“யார் வென்றாலும் முதலில் மதுவை ஒழியுங்கள்” – நடிகர் சிவகுமார் வேண்டுகோள்!

641
0
SHARE
Ad

24FRSIVAKUMAR1_664975gசென்னை – இன்று காலை சென்னை தியாகராய நகர் வாக்களிப்பு மையத்தில் தனது மகன் கார்த்திக்குடன் வந்து வாக்களித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார், யார் தேர்தலில் வென்று வந்தாலும் முதலில் மதுவை ஒழித்துக் கட்டுங்கள் என ஆவேசமாகக் கூறினார்.

“மதுவால் ஒரு தலைமுறையையே அழித்துவிட்டோம். பெரியார் யாருக்காகப் பாடுபட்டாரோ அந்த இனத்தை மதுவுக்கு அடிமையாக்கி விட்டோம். மதுவால் பாலியல் குற்றங்களும் அதிகரிக்கின்றன. மதுவால் பாதிக்கப்பட்டவனுக்கு மனைவிக்கும், மகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. எனவே, யார் வந்தாலும், முதலில் மதுவை ஒழித்துக் கட்டுங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” எனக் கடுமையான தொனியில் கூறினார்.