சென்னை – கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஒரு கடைத் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்ட முற்பட்டபோது, மாணவன் ஒருவன் அவருடன் தம்படம் (செல்பி) எடுக்க முயற்சி செய்தான். அப்போது ராகுல் என்ற அந்த கல்லூரி மாணவனின் கையை சிவகுமார் முரட்டுத் தனமாகத் தட்டி விட்டதில் முரட்டுத் தனமாக தடுத்ததில் அந்த செல்பேசி கீழே விழுந்து உடைந்தது.
இதனைத் தொடர்ந்து சமூக ஊடக வாசிகள் சிவகுமாரைக் கடுமையாகச் சாடி பல்வேறு கருத்துகளை இணையத் தளங்களில் வெளியிட்டனர். சிவகுமாரின் செயலைக் கண்டிக்கும் வண்ணம் அந்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.
இந்தக் கண்டனங்களைத் தொடர்ந்து சிவகுமார் காணொளி ஒன்றின் வழி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து நடிகர் சிவகுமார் சார்பில் புதிய செல்பேசி ஒன்று அந்த மாணவனுக்கு வழங்கப்பட்டது; இதற்காக சமூக வலைத்தளவாசிகளுக்கு அந்த மாணவர் ராகுல் நன்றி கூறியுள்ளார்.