Home இந்தியா சந்திரபாபு நாயுடு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது

சந்திரபாபு நாயுடு கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது

1073
0
SHARE
Ad

அமராவதி – ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சியான தெலுகு தேசம் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக இன்று அறிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியும், சந்திரபாபு நாயுடுவும் இணைந்து கலந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

பாஜகவையும், நரேந்திர மோடியையும் வீழ்த்துவதற்காக காங்கிரஸ் அமைக்கவிருக்கும் மாபெரும் கூட்டணியில் தெலுகு தேசம் இடம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும் ஓய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்.