கோலாலம்பூர் – எலிக் கழிவுகள், கரப்பான் பூச்சிகள் முட்டைகள் ஆகியவை கண்டறியப்பட்ட காரணத்தால், செத்தாப்பாவில் 23 உணவகங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டனாவ் கோத்தாவில் கோலாலம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய இந்தத் திடீர் சோதனையில் அவை கண்டறியப்பட்டதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை, சுகாதாரக் கேடாகவும், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறும் வகையிலும் இயங்கி வந்த சுமார் 400 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.