கோலாலம்பூர் – ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பதிப்பகத்தின் மூலம் மலேசியாவில் மலாய் மொழியிலான நாளிதழல்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக விநியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாளிதழ் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரைக் காவல்துறைக் கண்டறிந்த பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் துணையமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் மொகமெட் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவிற்குள் கொண்டு வரப்படும் அனைத்து வகையான பதிப்புகளையும் மலேசிய சுங்கத்துறை மிகக் கடுமையாகக் கண்காணித்து வருவதால், அது போன்ற நாளிதழ்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும் நூர் ஜஸ்லான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதோடு, அது போன்ற நாளிதழ்கள் இணையம் மூலமாகப் பதிவிறக்கம் செய்யப்படுகின்றனவா? என்பதையும் கண்டறிவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.