லண்டன் – உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேற்று வியாழக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹேரி எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டார்.
தனது தாய் இளவரசி டயானா போலவே எச்ஐவி மற்றும் எயிட்ஸ் விழிப்புணர்வை தன்னுடைய சமூக சேவையில் முக்கிய அங்கமாக வைத்துள்ள ஹேரி, தொடர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
எனினும், லண்டன் பாலியல் சுகாதார மையத்தில், எச்ஐவி பரிசோதனை செய்து விட்டு முடிவுக்காகக் காத்திருந்த போது, தனக்கு சற்று பதட்டமாக இருந்ததை ஹேரி ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும், பரிசோதனை முடிவில் எச்ஐவி இல்லை (நெகட்டிவ்) என்று காட்டவே ஹேரி மகிழ்ச்சியடைந்துள்ளார்.