அணு ஆயுத சோதனையால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், தனது சர்வாதிகார ஆட்சியால் தனது சொந்த நாட்டு மக்களையும் வதைத்து வருகின்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில், வடகொரிய வீரர்கள் விளையாடச் சென்ற போது, 17 பதக்கங்களுடன் நாடு திரும்ப வேண்டும் என கிம் ஜோங் உன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஒலிம்பிக்கில் பங்கேற்ற 31 வடகொரிய வீரர்களால், 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
இந்நிலையில், வடகொரிய அரசாங்கத்தில் இருப்பவரும் பேராசிரியருமான தோஷிமித்சு ஷிகிமுரா வெளியிட்டுள்ள தகவலில், போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, சிறந்த வீட்டு வசதி, சிறப்பான ரேஷன், கார் உள்ளிட்ட பல பரிசுகள் ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், போட்டியில் தோல்வியுற்றவர்களுக்கு வீட்டு வசதி குறைக்கப்படும், ரேஷன் பொருட்கள் குறைக்கப்படும், அதோடு, அவர்கள் நிலக்கரி சுரங்கங்களுக்கு வேலைக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2010-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டில் ஒன்றில், தோல்வியுற்ற வடகொரிய வீரர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹோங் உன் ஜோங்கிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படலாம் என்றும், மரண தண்டனை கூட வழங்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் கொரிய ஊடகங்கள் கூறுகின்றன.