Home Featured தமிழ் நாடு குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்!

குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய்!

729
0
SHARE
Ad

arun vijayசென்னை – சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து விட்டு, அதிகாலை 3 மணியளவில் தனது மனைவியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நடிகர் அருண் விஜய், காவல்நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அருண் விஜயின் காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், உடனடியாக அவரது தந்தையான நடிகர் விஜயகுமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் அருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதற்கு அருண் விஜய் உரிய அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்றும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.