கோலாலம்பூர் – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரங்கு ஒன்றில் அவதூறானக் கருத்துகளைப் பேசியதாக தேச நிந்தனைக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டிருந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவாவிற்கு, இன்று புதன்கிழமை, அமர்வு நீதிமன்றம் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளதோடு, 1800 ரிங்கிட் அபதாரமும் விதித்துள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.