கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை, மலேசியச் கப்பல் ஒன்று, இஸ்ரேல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது.
‘தி சாய்டாவ்னா – ஒலிவியா’ என்ற அந்தக் கப்பலில், 3 பணியாளர்கள், 10 ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களுள் மலேசியா சார்பில் பிரதிநிதித்துச் சென்ற டாக்டர் பவுசியா மொகமட் ஹாசனும் உள்ளார்.
நேற்று மலேசிய நேரப்படி 8.58 மணியளவில் அக்கப்பல் சிறை பிடிக்கப்பட்டதாக மை கேர் (Humanitarian Care Malaysia) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்டோட் துறைமுகம் வரையில் இஸ்ரேல் இராணுவத்தினரால், அக்கப்பல் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘காசா செல்லும் மகளிர் படகு – Women’s Boat to Gaza’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், காசாவில் இஸ்ரேல் முற்றுகையை எதிர்க்கும் வகையில் பாலஸ்தீன மக்களுக்கு உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தி அக்கப்பல் சென்றது குறிப்பிடத்தக்கது.