இம்முறை, கொடூரமான இவ்விபத்து தம்பதியரின் உயிரைப் பறித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் அப்துல் ரஹிம் அப்துல் ரஹ்மான் (வயது 51), அவரது மனைவி நூர்ஹயாதி ரோஸ்லி (வயது 46) ஆகிய இருவரும் தாங்கள் சொந்தமாக நடத்தி வரும் உணவுக்கடைகளுக்குத் தேவையான பொருட்களை கொடுத்து விட்டு, வழக்கமாகத் தாங்கள் செல்லும் மசூதிக்கு பெரோடுவா ஆக்சியா காரில் சென்று கொண்டிருந்திருக்கின்றனர்.
மெரு அருகே பெர்சியாரான் அஸ்தானா அருகே கார் சென்று கொண்டிருந்த போது, அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து, டன் கணக்கில் எடை கொண்ட கிரேனின் ஒரு பகுதி அவ்வளவு உயரத்தில் இருந்து காரின் மீது விழுந்து நசுக்கியுள்ளது.
இவ்விபத்தில் காரில் இருந்த அப்துல் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி நூர்ஹாயாதி ரோஸ்லி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இக்கொடூர விபத்திற்குக் காரணம் என்னவென்பது குறித்து காவல்துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது.