Home Featured இந்தியா சாகிர் நாயக் இயக்கத்திற்கு 5 ஆண்டுகால தடை!

சாகிர் நாயக் இயக்கத்திற்கு 5 ஆண்டுகால தடை!

1089
0
SHARE
Ad

zakir-naik

புதுடில்லி – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக் நடத்திவரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அரசு சார்பற்ற இயக்கத்திற்கு இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகாலத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வருகின்றது.

இந்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

சாகிர் நாயக் தற்போது வெளிநாட்டில் இருந்து வருகின்றார். கடந்த மாதம் அக்டோபரில் மலேசியா வந்து, ஓர் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியுடன் அவரது இல்லத்தில் சந்திப்பு ஒன்றையும் நடத்தி விட்டுச் சென்றார் சாகிர்.

zakir-naik-with-zahid-hamidi

மலேசியா வந்திருந்தபோது துணைப் பிரதமரைச் சந்தித்த சாகிர் நாயக்

மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் சாகிர் நாயக்கிற்கும் அவரது இயக்கத்திற்கும் எதிராக காவல் துறையில் செய்யப்பட்ட குற்றவியல் (கிரிமினல் குற்ற) புகார்கள், அவருடன் தொடர்புடைய “பீஸ்” தொலைக்காட்சியில் (Peace TV) ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய பேச்சுகள், அவரது தீவிரவாதத்தைத் தூண்டும் உரைகள் ஆகியவற்றை அடிப்படியாக வைத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் சட்டத்து புறம்பான நடவடிக்கைகளைத் தடை செய்யும் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA) – கீழ் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே சட்டத்தின் கீழ், ஓர் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்து தடை செய்யலாம் என்றாலும், இந்திய அரசாங்கம் அந்தப் பிரிவைப் பயன்படுத்தாமல், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட காரணத்திற்காகவே ஜாகிர் நாயக் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

வலுவான ஆதாரங்களில் அடிப்படையிலேயே இந்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.