புதுடெல்லி – சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு விரைவில் சம்மன் அனுப்பவுள்ள தேசியப் புலனாய்வு இலாகா, அதை அவர் தவிர்த்தால், அவருக்கு எதிராக அனைத்துலக குற்ற ஒழிப்பு காவல்துறையின் (Interpol) சிவப்பு அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் உள்ள ஜாகிர் நாயக் இந்தியாவிற்குத் திரும்பவில்லை என்றால், அவருக்கு எதிராக பிணை இல்லாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு, இண்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிக்கை வெளியிட தேசியப் புலனாய்வு இலாகா முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறு செய்யப்பட்டால், சவுதி அரேபியாவில் இருப்பதாக நம்பப்படும் ஜாகிர் நாயக்கை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.