Home Featured நாடு டிசம்பர் 13-ம் தேதி சிலாங்கூர், கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை!

டிசம்பர் 13-ம் தேதி சிலாங்கூர், கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை!

787
0
SHARE
Ad

azmin ali mகோலாலம்பூர் – வரும் டிசம்பர் 13-ம் தேதி, சிலாங்கூர் மற்றும் கிளந்தானுக்கு மட்டும் பொதுவிடுமுறை என்றும், அது கூட்டரசு விடுமுறை அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரைப் பொறுத்தவரையில் மாநில அரசாங்கம் டிசம்பர் 13-ம் தேதியைப் பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது.

காரணம், வரும் டிசம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாள் என்பதால் அன்றைய நாள் சிலாங்கூர் மாநில விடுமுறை. அதனால் அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 12-ம் தேதி திங்கட்கிழமையும் தன்னிச்சையாக மாநில விடுமுறை வருகின்றது. ஆனால் திங்கட்கிழமை மௌலிடுர் ரசுல் என்பதால் தேசிய விடுமுறை. அதனால் அதற்குப் பதிலாக டிசம்பர் 13-ம் தேதி சிலாங்கூரில் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ மொகமட் அஸ்மின் அலி நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், டிசம்பர் 13-ம் தேதி கிளந்தான் சுல்தான் புதிய மாமன்னராகப் பதவி ஏற்பதால், கிளந்தான் மாநில மக்கள் அதனைக் கொண்டாடும் வகையில் அம்மாநில அரசு அன்றைய நாளை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது.