கோலாலம்பூர் – கடந்த வாரம் செம்பூர்ணாவில் அபு சயாப் இயக்கத்தின் முக்கியத் தலைவன் மலேசியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தலைவனை இழந்த அவ்வியக்கம் பழிவாங்கும் நடவடிக்கைக்குத் திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்படி அவர்கள் திட்டமிட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ள காவல்துறைத் தயாராக இருப்பதாக துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரை அப்படிப்பட்ட தகவல்கள் எதையும் காவல்துறை உறுதிப்படுத்தவில்லை என்றும் நூர் ஜஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.