Home Featured நாடு “ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு

“ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு

1171
0
SHARE
Ad

mahathir-mohamadஷா ஆலாம் – எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி கட்டம் கட்டமாக இரத்து செய்யப்படும் என துன் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார்.

மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் பிரிம் உதவித் தொகை நிரந்தரமாக்கப்படும் என்றும் சட்டபூர்வமாக்கப்படும் என்றும் மகாதீர் அறிவித்தார்.

இதற்கு முன்னர் பிரிம் உதவித் தொகை இலஞ்சத்திற்கு நிகரானது என்று சாடியிருந்த மகாதீர் தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டு, பிரிம் உதவித் தொகை சட்டபூர்வமான முறையில் மக்களுக்கு சென்றடையும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிரிம் உதவித் தொகை ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சாரமாக செய்யப்படாது என்றும் மகாதீர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி இரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப விற்பனை வரி அமுல்படுத்தப்படும் என்றும் மகாதீர் கூறினார்.

நேற்று ஷா ஆலாமில், தான் தலைவராக இருக்கும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும்போது மகாதீர் இந்த அறிவிப்புகளை விடுத்தார்.