Home Featured நாடு ஜோகூர் சிறார்கள் விபத்து: குற்றத்தை மறுத்த கார் ஓட்டுநர் விசாரணை கோரினார்!

ஜோகூர் சிறார்கள் விபத்து: குற்றத்தை மறுத்த கார் ஓட்டுநர் விசாரணை கோரினார்!

996
0
SHARE
Ad

9 childrenஜோகூர் பாரு – கடந்த மாதம் ஜோகூரில், 8 சிறார்கள் பலியாகக் காரணமான, கார் விபத்தை ஏற்படுத்திய 22 வயதான பெண் மீது இன்று செவ்வாய்க்கிழமை குற்றவியல் நீதிமன்றத்தில், 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41 (1)-ன் கீழ், அபாயகரமாக மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி சலினா ஓமார் முன்னிலையில், மெண்டரின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர், சாம் மீதான குற்றச்சாட்டை வாசித்துக் காட்டினார். பின்னர் இவ்வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த சாம், விசாரணை கோருவதாக சாம் நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதனை ஏற்ற நீதிபதி, 10,000 ரிங்கிட் பிணைத்தொகையுடன், ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் சாமை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

அத்துடன், சாமின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக முடக்கியதோடு, சாமின் கடப்பிதழையும் நீதிமன்றம் பறிமுதல் செய்தது.

கடந்த பிப்ரவரி 18-ம் தேதி அதிகாலை ஜோகூர் பாருவில், சாலையோரம் கூட்டமாக சைக்கிளோட்டிச் சென்று கொண்டிருந்த 8 முதல் 16 வயது வரையிலான சிறார்கள் மீது, சாம் கே திங் ஓட்டி வந்த கார் மோதியதில், 8 சிறார்கள் மரணமடைந்ததோடு, மேலும் 8 சிறார்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.