தனியார் ரிசார்ட் ஒன்றில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்தனர். அவர்களுடன் வந்திருந்த இளம் பெண் ஒருவர், கடற்கரையில் தனியாக இருந்த நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அருகில் இருந்த சவுக்குத்தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இந்தியாவில் இருக்கும் ஜெர்மன் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
Comments