மாஸ்கோ – இன்று வெள்ளிக்கிழமை சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு இரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவத்திருக்கின்றன.
மற்றொரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு இணையானது இந்தத் தாக்குதல் என இரஷிய அதிபர் விளாடிமிர் புடின் வர்ணித்ததோடு, அனைத்துலக சட்டங்களை இந்தத் தாக்குதல் மீறுவதாகவும் கூறினார்.
ஆனாலும், மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரித்ததோடு, இதற்கு சிரிய அதிபர் பாஷார் அல் அசாத்தின் அணுகுமுறைகள்தான் காரணம் என்றும் அவரே தேடிக் கொண்ட முடிவு இது என்றும் கூறியிருக்கின்றன.