Home Featured நாடு குற்றத்தை இரத்து செய்ய அன்வார் மீண்டும் வழக்கு!

குற்றத்தை இரத்து செய்ய அன்வார் மீண்டும் வழக்கு!

787
0
SHARE
Ad

articlesanwar-ibrahim3-270613_600_399_100கோலாலம்பூர் – தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஓரினப் புணர்ச்சி குற்றத்தை இரத்து செய்ய புதியதொரு சட்டப் போராட்டத்தைத் தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் தொடங்குகிறார்.

இந்த முறை மோசடியைக் காரணமாக வைத்து தனது உரிமையியல் (சிவில்) வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அன்வார் நீதிமன்றத்தில் பதிவு செய்வார் என அவரது வழக்கறிஞரும், பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்திரன் அறிவித்தார்.

நஷ்ட ஈடு எதனையும் அன்வார் இந்த வழக்கில் கோரப் போவதில்லை என்றும் மாறாக, ஓரினப் புணர்ச்சி மீதான குற்றச்சாட்டை இரத்து செய்ய வேண்டும் என்றும் உடனடியாகத் தான் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அன்வார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே ஒருமுறை தன் மீதான குற்றச்சாட்டை இரத்து செய்யக் கோரி அன்வார் செய்த நீதிமன்ற விண்ணப்பத்தை கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) நிராகரித்தது.