12-வது பிகேஆர் காங்கிரஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதில் அன்வாரை சிறையில் இருந்து விடுவிப்பது குறித்தும், அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பதும் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பேசி முடித்த போது, லிம் கிட் சியாங்கும், மாட் சாபுவும் எழுந்து நின்று தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.