Home Featured நாடு அடுத்த பிரதமர் அன்வார் தான் – எதிர்க்கட்சிகள் ஆதரவு!

அடுத்த பிரதமர் அன்வார் தான் – எதிர்க்கட்சிகள் ஆதரவு!

840
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பார்டி அமனா நெகாரா தலைவர் மாட் சாபு உள்ளிட்ட எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், பிகேஆர் உறுப்பினர்களும் அடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் என்பதற்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.

12-வது பிகேஆர் காங்கிரஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதில் அன்வாரை சிறையில் இருந்து விடுவிப்பது குறித்தும், அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பதும் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பேசி முடித்த போது, லிம் கிட் சியாங்கும், மாட் சாபுவும் எழுந்து நின்று தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.