ஸ்ரீநகர் – அமர்நாத் புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு, காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்க தரிசனம் செய்ய பேருந்தில் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 5 பெண்கள் உட்ப 7 பக்தர்கள் இறந்ததோடு, 21 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இராணுவத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.