Home Slider நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சி – பயணி கைது!

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சி – பயணி கைது!

1665
0
SHARE
Ad

AirAsia-x-in-flightபுதுடெல்லி – நடுவானில் ஏர்ஆசியா விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்ததோடு, சக பயணிகளையும், பணியாளர்களையும் காயப்படுத்திய இந்தியப் பயணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திங்கட்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் அப்தாப் அகமது (வயது 32) என்ற அந்தப் பயணியை விமானப் பணியாளர்கள் கட்டுப்படுத்தி ராஞ்சி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் விமானநிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஜூலை 10-ம் தேதி, புதுடெல்லியிலிருந்து ராஞ்சி சென்ற தங்களது விமானத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதை ஏர் ஆசியா நிறுவனமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice