புதுடெல்லி – 14-வது இந்திய அதிபராக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்.
இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இந்திய நேரப்படி பகல் 12 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கவிருக்கிறது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இவ்விழாவில் இந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.