இஸ்லாமாபாத் – ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் விவகாரத்தில் சிக்கிய நவாப் ஷெரீப்பை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்ததையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், நவாப் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராகத் தேர்வு செய்வதாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்தது.
எனினும், ஷாபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தின் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் வரை, இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாகித் கஹான் பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய பிரதமருக்கான தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிட இன்று திங்கட்கிழமை மதியம் 3 மணிக்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென பாகிஸ்தான் நாடாளுமன்றச் செயலகம் அறிவித்திருக்கிறது.
இதனிடையே, மற்ற கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, இ இன்சாப் ஆகிய கட்சிகள் சிறிய கட்சிகளுடன் இணைந்து பிரதமர் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருக்கின்றன.