Home Slider ஏர் ஆசியா: முன்பதிவுகளில் 45 % வரை தள்ளுபடி!

ஏர் ஆசியா: முன்பதிவுகளில் 45 % வரை தள்ளுபடி!

1626
0
SHARE
Ad

AirAsia-x-in-flightகோலாலம்பூர் – உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு 45 விழுக்காடு வரை தள்ளுபடி விலையை நிர்ணயித்திருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் ஆசியா.

இன்று திங்கட்கிழமை தொடங்கி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி வரையிலான முன்பதிவுகளில், ஒரு பயணியாக இருந்தால் 15 விழுக்காடு தள்ளுபடி விலையும், இரு பயணிகளாக இருந்தால் 25 விழுக்காடும், 3 பயணிகளுக்கு 35 விழுக்காடும், 4-க்கும் கூடுதலான பயணிகளுக்கு 45 விழுக்காடும் தள்ளுபடி விலை நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்த தள்ளுபடி விலையில், பயண காலம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் ஆகஸ்ட் 28 வரையில் ஆகும்.