Home நாடு 14-வது பொதுத்தேர்தலில் அதிக பெண்கள் களமிறங்குவார்கள்: சாஹிட்

14-வது பொதுத்தேர்தலில் அதிக பெண்கள் களமிறங்குவார்கள்: சாஹிட்

781
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – வரும் 14-வது பொதுத்தேர்தலில், அம்னோ சார்பில் நிறைய பெண்களைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

கொள்கைகளை உருவாக்குவதில் 30 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இதனைச் செய்ய அம்னோ முடிவெடுத்திருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

“சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், பெண்கள் பற்றிய நமது எண்ணங்களையும், நடத்தைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்கள் கடினமாக உழைத்தால் அவர்களை வெறுமனே புகழ்வதை மட்டும் செய்யாமல், ஜிஇ14-ல் போட்டியிடவும் வாய்ப்பளிக்க வேண்டும்”

#TamilSchoolmychoice

“அவர்களுக்கு ஒரு பொறுப்பைக் கொடுப்போம். காரணம் தற்போது பெண்கள் அனைவரும் நிபுணத்துவத்தை அடைந்துவிட்டார்கள். எனவே அவர்களால் இந்நாட்டில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்” என்று பத்து பஹாட்டில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கூட்டத்தில் சாஹிட் தெரிவித்தார்.