Home நாடு பத்துகேவ்ஸ் பகுதியில் ஆடவர் கொலை!

பத்துகேவ்ஸ் பகுதியில் ஆடவர் கொலை!

786
0
SHARE
Ad

PDRMகோலாலம்பூர் – சன்வே பத்துகேவ்ஸ் பகுதியில் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கடைக்கு முன்பு , 40 வயது ஆடவர் ஒருவர் உடலில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களோடு இறந்துகிடந்தார்.

இன்று அதிகாலை 1.58 மணியளவில் காவல்துறைக்கு கிடைத்தத் தகவலையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, கோலாலம்பூர் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்நபரை பலர் சேர்ந்து அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாக கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலி அகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice