Home இந்தியா பீகாரில் 15 பேர் இறப்பிற்குக் காரணமான யானை கொல்லப்பட்டது!

பீகாரில் 15 பேர் இறப்பிற்குக் காரணமான யானை கொல்லப்பட்டது!

859
0
SHARE
Ad

Forest guards patrol the area on an elephant as they wade through floodwaters in Morigaon district of Assam state, India, 17 August 2014. At least 13 people were killed and 500,000 affected by swirling river waters in northern India after neighbouring Nepal released waters from its barrages following monsoon flooding, officials said.ஷாஹிப்காஞ் (இந்தியா) – இந்தியாவின் கிழக்கத்திய மாநிலமான ஜார்கண்ட் மற்றும் பீகாரில், 15 பேரில் இறப்பிற்குக் காரணமாக யானை ஓன்று நேற்று வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது.

சுமார் 20 முதல் 25 வயதுடைய அந்த யானை, கடந்த மார்ச் மாதத்திலிருந்து 11 பேரைக் கொன்றதோடு, நிறைய வீடுகளையும் நாசம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், அண்டை மாநிலமான பீகாரிலும் 4 பேரை அந்த யானை கொன்றதாகவும் நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த யானையைப் பிடிக்க அம்மாநில வனத்துறை அதிகாரி என்.கே சிங் தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடிக்க முடியாமல் போனதால், இறுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது.