இன்று திங்கட்கிழமை, நடைபெற்ற போட்டிகளில், கோலாலம்பூர் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான வூஷூ போட்டியில், பினாங்கைச் சேர்ந்த வாய் கின் 9.68 புள்ளிகள் பெற்று, 9.65 புள்ளிகள் எடுத்திருந்த சக போட்டியாளர் வேங் சன்னை வீழ்த்தினார்.
மேலும், இன்று சன்வே பிரமிட்டில் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் போலிங் பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த அலெக்ஸ் லியூ – முகமது சியாபிக் ரிதுவான் அப்துல் மாலிக் ஜோடி 2,647 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது.
மேலும் இன்று நடைபெற்ற அம்பு எய்தல் போட்டியில், ஆண்களுக்கான பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த கைருல் அனுவார் முகமது, முகமது அக்மால் நூர் ஹாஸ்ரின், ஹாசிக் கமாருடின் ஆகிய மூவர் கூட்டணி, தாய்லாந்துக்கு எதிராக விளையாடி 5-1 புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றது.