Home நாடு ‘அரசியல் கட்டுரை எழுதாதே’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மீது தாக்குதல்!

‘அரசியல் கட்டுரை எழுதாதே’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மீது தாக்குதல்!

2121
0
SHARE
Ad

Malacca muthukrishnanஈப்போ – பிரபல எழுத்தாளரும், கட்டுரையாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நேற்று திங்கட்கிழமை காலை சில மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

ஈப்போவில் உள்ள புந்தோங் கம்போங் பகுதியில் அவரைத் தடுத்து நிறுத்திய மூன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ‘இனி அரசியல் கட்டுரை எழுதாதே’ என்று கூறி முகத்தில் தாக்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், வாயில் இரத்தம் வழிந்த நிலையில் காணப்படும் முத்துக்கிருஷ்ணனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள அவரது உறவினர்கள், இதற்கு தக்க நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice