Home நாடு சீ விளையாட்டு: மலேசியாவுக்கு இதுவரை 23 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம்!

சீ விளையாட்டு: மலேசியாவுக்கு இதுவரை 23 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம்!

886
0
SHARE
Ad

KL2017-medal1கோலாலம்பூர் – சீ விளையாட்டுப் போட்டி 2017-ல் இதுவரை மலேசியா பல்வேறு பிரிவுகளில் 23 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்று முன்னிலையில் இருக்கின்றது.

இன்று திங்கட்கிழமை, நடைபெற்ற போட்டிகளில், கோலாலம்பூர் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான வூஷூ போட்டியில், பினாங்கைச் சேர்ந்த வாய் கின் 9.68 புள்ளிகள் பெற்று, 9.65 புள்ளிகள் எடுத்திருந்த சக போட்டியாளர் வேங் சன்னை வீழ்த்தினார்.

wushu-gold-picசீ விளையாட்டுப் போட்டி 2017-ல், வாய் கின்னுக்குக் கிடைத்திருக்கும் இது இரண்டாவது தங்கமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான ஜியான்ஷு போட்டியில் தங்கம் வென்றார்.

#TamilSchoolmychoice

மேலும், இன்று சன்வே பிரமிட்டில் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் போலிங் பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த அலெக்ஸ் லியூ – முகமது சியாபிக் ரிதுவான் அப்துல் மாலிக் ஜோடி 2,647 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது.

RAFF9005அதே போட்டியில், மலேசியாவைச் ரபிக் இஸ்மாயில் – ஆட்ரியான் ஆங் ஜோடி 2,630 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

மேலும் இன்று நடைபெற்ற அம்பு எய்தல் போட்டியில், ஆண்களுக்கான பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த கைருல் அனுவார் முகமது, முகமது அக்மால் நூர் ஹாஸ்ரின், ஹாசிக் கமாருடின் ஆகிய மூவர் கூட்டணி, தாய்லாந்துக்கு எதிராக விளையாடி 5-1 புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றது.

archery-men-goldஅதே போல், மகளிருக்கான அம்பு எய்தல் பிரிவில் பிரிவில் நூர் அபிசா அப்துல், நூர் அலியா காப்பார், நூர்மலியா ஹனிசா அணி, 5 – 1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேசியாவைத் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.