கோலாலம்பூர் – தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வரும் செப்டம்பர் 5-ம் தேதியோடு, 60 வயதை எட்டுவதால் ஓய்வு பெறுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு, ஓய்வு பெற்ற இஸ்மாயில் ஓமாருக்குப் பதிலாக, புதிய காவல்படைத் தலைவராக நியமிக்கப்பட்ட காலிட், கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இது என்னுடைய சுய விருப்பம். ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று மலாய் நாளேடு ஒன்றுக்கு அளித்த தகவலில் காலிட் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, துணை காவல்படைத் தலைவரான நூர் ரசீத் இப்ராகிம் (வயது 59) காலிட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகின்றது.