இந்நிலையில், விக்ரம் நடிப்பில் ஏற்கனவே இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ‘சாமி’ படத்தைத் தூசி தட்டி மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் ஹரி. அதே விக்ரம்தான் கதாநாயகன்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு, இன்று விஜயதசமி சிறப்பு நாளை முன்னிட்டு தொடங்கியது.
இந்தப் படத்தில் விக்ரமின் புதிய கதாநாயகியாக இணைபவர் கீர்த்தி சுரேஷ். திரிஷாவும் இந்தப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாமி-2 படத்தில் பாபி சிம்ஹா, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கின்றனர்.