Home உலகம் ‘சின்ன ராக்கெட்டுக்காரர்’ – வடகொரிய அதிபரைக் கிண்டலடித்த டிரம்ப்!

‘சின்ன ராக்கெட்டுக்காரர்’ – வடகொரிய அதிபரைக் கிண்டலடித்த டிரம்ப்!

700
0
SHARE
Ad

trump-gop-759வாஷிங்டன் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தனது தேசியச் செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் டிரம்ப், “ரெக்ஸ் டில்லெர்சனிடம் எமது அற்புதமான தேசியச் செயலாளர். சின்ன ராக்கெட்காரருடன் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அவரிடம் கூறிவிட்டேன்” என்று டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.

கிம் ஜோங் உன் தலைமையிலான வடகொரிய அரசு, உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

வடகொரியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை ஆத்திரமூட்டியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.