Home கலை உலகம் கமல் முந்திக் கொண்டதை சூட்சமமாகச் சுட்டிக் காட்டிய ரஜினி!

கமல் முந்திக் கொண்டதை சூட்சமமாகச் சுட்டிக் காட்டிய ரஜினி!

1090
0
SHARE
Ad

Rajinispeechatsivajimanimandabam1102017சென்னை -சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக, தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலங்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

திரைப்பிரபலங்களில் சிவாஜி குடும்பத்தாரோடு, ரஜினியும், கமலும் ஒரே மேடையில் அமர்ந்து சிவாஜியின் பெருமைகள் பற்றியும், அதேவேளையில், இருவரின் அரசியல் நிலைபாடுகளைப் பற்றியும் பேசினர்.

இவ்விழாவில் ரஜினி பேசுகையில், “சிவாஜி என்ற மகானுடன் பழகியிருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஒரு நடிகராக இருந்ததால் மட்டும் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. அவரின் சமூக அக்கறையும் அதற்குக் காரணம். சுதந்திரப் போராட்டவாதிகளை தனது நடிப்பால் அப்படியே கண்முன் கொண்டு வந்து காட்டியவர். அதேவேளையில் கடவுள் மறுப்புக் கொள்கை பரவலாக இருந்த காலத்தில், ஆன்மீகப் படங்களில் நடித்திருக்கிறார். அவர் தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றது அவருக்கு அவமானம் இல்லை. அவரது தொகுதி மக்களுக்குத் தான் அவமானம்” என்று ரஜினி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கமல் குறித்துப் பேசுகையில், “அரசியலில் வெற்றி பெற பெயரும் புகழும் இருந்தால் மட்டும் போதாது. அதையும் தாண்டி என்னமோ அதில் இருக்கிறது. எனக்கு அது என்னவென்று சத்தியமாகத் தெரியவில்லை. கமல்ஹாசனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தாலும் எனக்கு சொல்லமாட்டாரு. ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ?. அதைப் பற்றிக் கேட்டால் என் கூடவா சொல்றேன்னு சொல்றாரு” என்று சிரித்துக் கொண்டே ரஜினி தெரிவித்தார்.

ரஜினியின் பேச்சு இரண்டு விதமாகப் பார்க்கப்படுகின்றது. ஒன்று தான் அரசியலில் இறங்குவது என்ற முடிவெடுத்து, நிறுத்தி நிதானமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கைகள் அதிரடியாக டுவிட்டரில் வெளியாகத் தொடங்கின. அதற்கு பக்கபலம் சேர்க்கும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியும் அமைந்தது. அதைப் பயன்படுத்தி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக நிறைவு பெற்றபோது, தான் அரசியலில் இறங்கப்போவதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார் கமல்.

அரசியலில் இறங்குவது என்று முடிவெடுத்த பின்னர், கமல் போல் அதனைத் தக்க தருணத்தில் சரியாக வெளிப்படுத்தத் தவறிவிட்டோமோ? என்ற வருத்தம் ரஜினிக்கு இருக்கலாம் என்று பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது, தான் அரசியலுக்கு வருவது தெரிந்ததும், கமல் உடனடியாக களத்தில் இறங்கி தன்னை முந்திக் கொண்டதையும் ரஜினி சூட்சமமாக வெளிப்படுத்தியதாகவும் பார்க்கப்படுகின்றது.