Home கலை உலகம் ‘ராஜா ஒன் மேன்’ இசை நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது!

‘ராஜா ஒன் மேன்’ இசை நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது!

953
0
SHARE
Ad

Ilayaraja-hero-imageகோலாலம்பூர் – புக்கிட் ஜாலிலில், அரங்கம் நிறைந்த ரசிகர்கள் பேராவலோடு காத்திருக்க, இசைஞானி இளையராஜாவின் வரலாற்றைச் சொல்லும் ஒரு காணொளி நிறைவு பெற்றவுடன், தனது பிரத்யேக உடையான வெள்ளை வேஷ்டி சட்டை சால்வையுடன் இளையராஜா ரசிகர்கள் முன் தோன்றினார்.

முதல் பாடலாக, இசைஞானியின் குரலில் ‘ஜனனி ஜனனி’ என்ற பாடலுடன் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தியாவில் இருந்து நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் கட்டமைப்பு சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு உள்ளிட்ட மலேசியத் தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.