காவல்துறை வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர், கவர்ச்சியாக உடையணிந்த பெண் ஒருவருடன் ‘நட்பு’ பாராட்டும் புகைப்படம் ஒன்று நட்பு ஊடகங்களில் பரவியது.
இதனையடுத்து, அந்த அதிகாரி உடனடியாக ரோந்துப் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ முகமட் கலீல் காதர் முகமட் தெரிவித்திருக்கிறார்.
என்றாலும், அச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments