கிள்ளான் – நேற்று திங்கட்கிழமை மதியம், காப்பார் அருகே உள்ள சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பள்ளியில் இருந்த 27 மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
மதியம் 2.30 மணியளவில் அப்பள்ளியில் தங்கும்விடுதியில் இருந்த படுக்கையறை ஒன்றில் தீ பற்றியதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து, 2.45 மணியளவில் சுங்கை பினாங்கு, கோத்தா ராஜா, காப்பார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, ஜாலான் டத்தோ கெராமட்டில் இருந்த சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆசிரியர்கள், 21 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அதன் பின்னர் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, ரெம்பாவில் உள்ள சமயப்பள்ளி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக அதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.